எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும், கோடி ஸ்தோத்திரம்!
ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2
கொண்டாடும், கோடி ஸ்தோத்திரம்

1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே,
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்! – எங்கள்

2. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்! – எங்கள்

3. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை
ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்! – எங்கள்



engkal thuthithdhalin jaya kempeerame

engkal thuthithdhalin jaya kempeerame
enth nalum, kodi sthoththiram!
aaviyodanma thekam
aandavar um bukazh badum – 2
kondadum, kodi sthoththiram

1. thevanaith thuthibpathondre engkal muzhu mudhal uuzhiyame,
aaviyin niraivutane endrum thevanaith thozhuthiduveாm!
nikare illadhavar! neer niththiyamanavar!
makimai nirainthdhavar! neer makaththuvam aninthdhavar! – engkal

2. thozhupavar naduvinile thinam jothiyay velibpaduvar
uuzhiyar maththiyile uyirth thozhanay utan varuvar
kirubai ullavar! neer thuthiyil makizhpavar!
kiriyai seypavar! neer makimai alibpavar! – engkal

3. thevanukku nikaray muzhu akilaththil evarumillai
aandukal mudinththubonalum avar aalukai mudivathillai
aaviyaib bozhipavar! neer aarudhal alibpavar!
eenththi sumabpavar! neer makimaiyil serbpavar! – engkal